தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி மாவட்ட கலெக்டர் ஆபீஸ் முன்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு கிராம செவிலியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் மங்கையர்கரசி தலைமையில் கலெக்டர் ஆபீஸ் முன்பு 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புற செவிலியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கிராம சுவாமி சுகாதார மையங்களில் உள்ள 3000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், மாலை பணி முடிந்த பின்னர் ஆறு மணிக்கு மேல் இரவு எட்டு மணி வரை நடத்தப்படும் ஜூம் மீட்டிங்கை தடை செய்ய வேண்டும்,
கிராமப்புற செவிலியர்களை பணி நிமித்தமாக மிரட்டுவதை அரசு கைவிட வேண்டும், பேஸ் ஆப்பிற்கு தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து தமிழ்நாடு அரசு கிராமப்புற செவிலியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கப்பட்டது.