தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்துவரும் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு காரணம் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
சென்னை முகப்பேர் பகுதியில் இயங்கிவரும் ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக கடந்த மாதத்தில் 5 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். அந்த வழக்கு தொடர்பான விசாரணையில் 3 நாட்களுக்கு முன் 10 மாணவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சென்னை ஜெ.ஜெ.நகர் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையில் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி, சென்னை காட்டாங்கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததும், கஞ்சா மட்டுமின்றி மெத்தபெட்டமைன் வகை போதைப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டதும் அந்த விசாரணையின் மூலம் தெரியவந்தது.
பின்னர் அந்த மாணவர்களின் செல்போன்களை சோதனை செய்ததன் மூலம் யாரெல்லாம் கஞ்சா வாங்கினார்கள் என்பதும் கண்டுபிடுவிக்கப்பட்டு அவர்களையும் போலீசார் கைது செய்தனர். அப்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் போன் நம்பரும் கஞ்சா வாங்கியவர்கள் போனில் இருந்தது. அதனால் அவரை நேற்று தனிப்படை போலீசார் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.
அலிகான் துக்ளக்கிடம் சுமார் 12 மணிநேரம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக் உட்பட 7 பேர் மீது போலீசார் போதைப்பொருள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக், ரியாஸ், சந்தோஷ், குமரன், பாசில் அகமது, சையது, யுகேஷ், ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.