காரியாபட்டி :
காரியாபட்டி நகர் பகுதியில் , சாலை விரிவாக்கப் பணிகளுக்கு ரூ. 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தமிழக முதல்வருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மதுரை – தூத்துக்குடி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. காரியாபட்டி நகர் பகுதி. சாலை இரண்டு பக்கத்திலும் இட நெருக்கடி காரணமாக அவ்வப்போது போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது.
இதன் அடிப்படையில், நகர் பகுதியில் சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் பேரில், காரியாபட்டி கே. செவல்பட்டியிலிருந்து – அய்யப்பன் கோவில் வரை சாலை, விரிவாக்கப்பணிகளுக்கு ரூ. 15 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
சாலை விரிவாக்கப் பணிகளுக்கான ஆயத்த வேலைகளை நெடுஞ்சாலைத் துறையினர் செய்து வருகின்றனர். மேலும், சாலை விரிவாக்கப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இதற்கு உறுதுணையாக இருந்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும் பொதுமக்கள் சார்பாக, பேரூராட்சி தலைவர் செந்தில் நன்றி தெரிவித்துள்ளார்.