Close
ஏப்ரல் 1, 2025 10:36 காலை

சோழவந்தானில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் : தொட்டுவிடும் தூரத்தில் அபாயம்..!

மாடியில் தொட்டுவிடும் தூரத்தில் உள்ள மின்கம்பிகள்

சோழவந்தான் :

சோழவந்தானில் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மாடிகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சோழவந்தான் மின்வாரிய அலுவலர்கள் உடனடியாக ஆபத்தான நிலையில் செல்லும் மின் கம்பிகளை அகற்றி பாதுகாப்பான வழியில் செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக மின்வாரிய அலுவலகம் அருகில் சப்பாணி கோவில் தெரு பகுதியில் பல்வேறு இடங்களில் வீட்டு மாடியில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் வீட்டு மாடிக்கு செல்லும் உரிமையாளர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் மின் கம்பிகளை எதிர்பாராமல் தொட்டுவிட்டால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.

இது குறித்து சோழவந்தான் மின்வாரிய அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தும் நேரில் சென்று கூறியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெரும் விபத்து ஏற்படும் முன் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அப்புறப்படுத்த வேண்டும் அல்லது பாதுகாப்பான வழியில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top