வங்கதேசத்தில் இந்துக்களை கண்டித்து காஞ்சிபுரம் இந்து அமைப்புகள் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற போது கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தின் இந்துக்களுக்கு எதிரான செயல்கள் அதிக அளவில் நடப்பதாகும் அதனை நிறுத்த வேண்டும் என கோரி இந்தியா முழுவதும் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இன்று பாஜக மாவட்ட செயலாளர் பாபு மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வங்கதேசத்தை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 75க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்