Close
டிசம்பர் 12, 2024 5:43 மணி

ஜெயலலிதா உருவ படம் முன் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி எடுத்த காஞ்சிபுரம் அதிமுக வினர்

காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய அதிமுகவினர்..

காஞ்சிபுரம் அதிமுக மாநகர கிழக்குப் பகுதி செயலாளர் பாலாஜி தலைமையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியையெட்டி மெழுகுவர்த்தி ஏந்தி, வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.

மறைந்த அதிமுக பொது செயலாளரும், மறைந்த தமிழக முதல்வருமான ஜெ ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மலர்வளையம் வைத்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் அதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற அயராது பாடுபடுவோம் என உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை பேருந்து நிலையம் அருகே மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து காந்தி சாலையில் ஜெயலலிதா பேரவையின் மாவட்ட செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் மற்றும் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் ஏற்பாட்டின் பேரில் அங்கு அமைக்கப்பட்டிருந்த திரு உரவப்படத்திற்கு மாலை அணிவித்து அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை காஞ்சிபுரம் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே காஞ்சிபுரம் மாநகர கிழக்கு மண்டலம் சார்பில் மண்டல செயலாளர் பாலாஜி தலைமையில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவ படத்திற்கு தீபம் ஏற்றி வழிபட்டு மெழுகுவர்த்தி ஏற்றி அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினர்.

காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதி அதிமுக செயலாளர் பாலாஜி சார்பில் ஜெயலலிதா உருவ படத்திற்கு முன் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதி எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தற்போது நடக்கும் குடும்ப ஆட்சியில் கொலை உள்ளிட்டவைகளை தடுக்க தவறிய திமுக ஆட்சியை அகற்ற அனைவரும் அயராது பாடுபடுவோம், மீண்டும் தமிழகத்தில் பொற்கால ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒன்றிணைவோம் என வாசிக்க, ஜெயலலிதா திருவுருவப்படத்திற்கு முன்பாக அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள், ஒன்றிய செயலாளர் வட்ட செயலாளர்கள், பகுதி அதிமுக நிர்வாகிகள் பிரகாஷ், தமீன்அன்சாரி, எம்ஆர்ஜி கணேஷ் உள்ளிட்ட அதிமுகவினர் ஏராளமான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top