காஞ்சிபுரம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட நுகர்வோர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தொடங்கி வைத்தார்.
பொருட்களை அல்லது சேவைகளையும் விலை கொடுத்தோ, வாக்குறுதி கொடுத்தோ வாங்குபவரை நுகர்வோர் என்கிறோம். இது போன்ற நிலையில் நுகர்வோரின் உரிமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு கொள்ளும் வகையில் அறிந்து கொள்ளும் நிலையில் அதன் சேவைகள் சிறப்பாக இருக்கும் நோக்கில் தமிழக முழுவதும் நுகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மாவட்ட அலுவலர் பாலாஜி தலைமையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி, கல்லூரி , மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கலைச்செல்வி தொடங்கி வைத்தார்.
இப்பேரணியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் குடிமக்களின் நலன் காக்க நுகர்வோர் சட்டம் அறிந்திடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் ஏற்படுத்துதல், தரக் குறைவான பொருட்களை அனுமதிக்க மாட்டோம் , கலப்படம் தவிர்த்தல், நுகர்வோர் உரிமைகளை அறிந்திடுதல் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய பதாகைகளை ஏந்தியும் , கோஷங்கள் எழுப்பியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி காவலன் கேட், கரிகினில் அமர்ந்தவள் கோயில் தெரு மேட்டுத்தெரு வள்ளல் பச்சையப்பன் தெரு வழியாக மூங்கில் மண்டபத்தில் நிறைவு பெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியவரே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் ஆய்வாளர் வெங்கடேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.