அலங்காநல்லூர் :
மதுரை மாவட்டம் உலகப் பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டிற்கு முதன்மையான தெய்வமாக விளங்கக்கூடிய அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நேற்று மாலை அங்குள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் பதவியேற்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
அறங்காவலர் குழு தலைவராக அமுல் ராணி ரகுபதி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக பெரியசா|மி, சந்திரன் ,கணேசன் மாரிசாமி உள்ளிட்ட நான்கு பேர் பதவி ஏற்று கொண்டனர் .
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் உதவி ஆணையர் வளர்மதி ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ,ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், பொதும்பு தனசேகர் , பேரூராட்சி தலைவர்கள் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், பால்பாண்டியன், நகர் செயலாளர்கள் ரகுபதி, மனோகர வேல் பாண்டியன் பேரூராட்சி துணைத் தலைவர் சாமிநாதன் ஒன்றிய அவைத்தலைவர் நடராஜன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.