Close
டிசம்பர் 12, 2024 8:29 காலை

காஞ்சிபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள்..!

அம்பேதகர் நினைவு தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு அனைத்து துறைகள் சார்பாக 592 பயனாளிகளுக்கு ரூபாய் 4 கோடி 44 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வழங்கினர்.

இந்தியா முழுவதும் இன்று அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் காஞ்சிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஏழிலரசன் , மேயர் மகாலட்சுமி உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்பாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் துறை சார்பாக நூறு கழிவு நீர் அகற்றும் இயந்திரங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன மக்களை தொழில் முனைவராக மாற்றும் திட்டத்தின் கீழ் வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை, தாட்கோ , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, மாநில ஊரக வாழ்வாதார திட்டம், கூட்டுறவு துறை, தோட்டக்கலைத்துறை, வாழ்ந்து காட்டுவோம் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு நலத்துறை சார்பாக 592 பயனாளிகளுக்கு ரூபாய் 4 கோடி 44 லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அனைவரும் வழங்கினர்.

முதலமைச்சர் தொடங்கிய திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் தொழில் முனைவோராக மாற தமிழக அரசு அனைத்து உதவிகளும் செய்து வருவதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு காலணி, கையுறை, ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் ஆசிக்அலி, ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணகண்ணன் மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top