சோழவந்தான் :
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அருகில் உள்ள ஐயப்பன் திருக்கோயிலில் உள்ள ஐயப்பனுக்கு வைகை ஆற்றில் ஆராட்டு விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு இன்று காலை 9 மணிக்கு ஐயப்பன் கோயிலில் இருந்து புறப்பட்டு
தெற்கு தெரு மேலரத வீதி வழியாக வைகை ஆற்றிற்கு சென்றடைந்தார். அங்கு ஐயப்ப பக்தர்கள் புடைசூழ வைகை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது.
தொடர்ந்து, ஐயப்பனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு கோட்டைவாசல் காளியம்மன் கோவில் பேருந்து நிலையம் மார்க்கெட் ரோடு வழியாக சன்னிதானம் வந்தடைந்தது. பிறகு, கோயில் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.
இதில், பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். சந்தோஷ் மற்றும் தங்கபாண்டி தலைமையில் விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.