தேசமெல்லாம் புகழ்ந்தாடும் முக்தி தரும் ஏழில் காஞ்சி மாநகரம் ஒன்றாகும். இம்மாநகரில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் ஐந்து மற்றும் புராண சிறப்படைய சிவாலயங்களும் அதிகளவில் உள்ளது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி கிழக்கு ராஜ வீதியில் நகரேசம் என்ற அருள்மிகு நகரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
‘கச்சி பல தனியும் ஏகம்பத்தும் கயிலாயநாதனையே காணலாமே’ என்ற அப்பர் அருள்வாக்கு இப்படி அமைந்துள்ளது இந்த ஆலயம்.
இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா 15 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் நாள் ஆறு காலை யாக பூஜை நிறைவுற்று ராஜகோபுரம் மூலவர் விமானம் ஐயப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 48 நாட்களும் இந்த ஆலயத்தில் மண்டல அபிஷேக விழா நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி நாளில் 3 திருக்கலசங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான கலசங்கள் நிர்மாணிக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் காலை 8 மணிக்கு துவங்கியது.
இறுதியாக கலச புறப்பாடுகள் மேல வாத்தியங்களுடன் திருக்கோயிலை வளம் வந்து அனைத்து திரு தெய்வங்களுக்கும் புனித நீர் ஊற்றி நிறைவிழா நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவர் அருள்மிகு நகரீஸ்வருக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் பால், அபிஷேகப் பொருட்கள் உள்ளிட்டுவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற்றனர். நினைவு நாள் நிகழ்ச்சியை செயல் அலுவலர் வஜ்ரவேலு மற்றும் நகரீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.