Close
டிசம்பர் 24, 2024 3:24 காலை

இந்து ஆன்மீக சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் அண்ணாமலையாருக்கு திருக்குடைகள்..!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு இந்து ஆன்மீக சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் 11 வது ஆண்டாக 7 திருக்குடைகள் அண்ணாமலையாருக்கு திருக்கோவிலுக்கு அளிக்க கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு இந்து ஆன்மீக சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் 11 வது ஆண்டாக 7 திருக்குடைகள் அண்ணாமலையாருக்கு திருக்கோவிலுக்கு அளிக்க கொண்டு செல்லப்பட்டது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றானதும் அக்னி ஸ்தலம் என அறியப்படுவதுமான திருவண்ணாமலையில் பல்லாயிரம் ஆண்டுகளாக கார்த்திகை மாத தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கெடியேற்றத்துடன் துவங்கிய கார்த்திகை தீபத் திருவிழாவினை முன்னிட்டு திருக்கோவில் சார்பில் சிறப்பான பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு காலை மலை இரு வேளைகளிலும் சிறப்பு தீப பிரம்மெற்சவ அலங்காரங்களில் அண்ணாமலையார் அருள் பாலித்து வருகின்றார்.

இத்திருவிழவினை முன்னிட்டு இந்து ஆன்மீக சேவா சமிதி டிரஸ்ட் சார்பில் தொடர்ந்து 11வது ஆண்டாக திருக்குடை சாற்றுவது நடைபெற்று வருகின்றது. கடந்த வாரம் சென்னையில் ஆன்மீகப் பெருமக்கள், சித்தர்கள் முன்னிலையில் புறப்பட்ட திருக்குடை பல்வேறு கோவில்களில் ஆராதனை செய்யப்பட்டு காஞ்சிபுரத்தில் நான்கு ராஜ வீதிகளை சுற்றி வந்து ஏகாம்பரநாதர் கோயிலை வந்தடைந்தது. பஞ்சுபேட்டை பகுதியில் உள்ள ஆதி அண்ணாமலை அருள்வாக்கு மகிமை பீடத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற நாராயண குரு வைத்தியசாலையில் உள்ள ஆள்வார் பங்களா சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழி நெடுகிலும் நின்று அண்ணாமலையார் திருக்கொடையை வணங்கினர். பல்வேறு சிவனடியார்கள் புடைசூழ ஆட்டம், பாட்டம் கொண்டாடத்துடன் காஞ்சிபுரத்திலிருந்து புறப்பட்டது.

ஆதி அண்ணாமலையார் அருள்வாக்கு மகிமை பீடத்தின் ஒருங்கிணைப்பாளர் பவானிசங்கர் அவர்கள் தலைமையில் புறப்பட்ட திருக்குடை செவிலிமேடு , மாமண்டூர், செய்யார், வந்தவாசி , சேத்பட் வழியாக சென்று இன்று இரவு திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் சென்றடையும்.‌ நாளை அருள்மிகு திருவண்ணாமலை திருக்கோவிலில் திருக்கடை ஒப்படைக்கப்படும்.

விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடியின்றி வளம் பெறவும் போன்ற உலக நன்மைக்காக ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் திருக்குடை அளித்து வருவதாக இந்து ஆன்மீக சேவா சமிதி டிரஸ்ட்டின் நிறுவனர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top