சினிமாவில் ஹீரோவாக இருக்கலாம் ஆனால் மக்கள் பணி செய்தால் மட்டுமே மக்கள் விரும்புவார் – மாநில மாணவர் அணி செயலாளர் எழிலரசன்
காஞ்சிபுரத்தில் திமுக மாணவர்கள் அணி சார்பாகவும் முன்னாள் அமைச்சர் சிபிஎம் அண்ணாமலை 108 வது பிறந்தநாள் விழா மற்றும் உதயநிதி பிறந்தநாள் விழா என ஒருங்கிணைந்த எளியோர் எழுச்சி நாள் திமுக மாநில மாணவரணி செயலாளர்சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் 1731 நபர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆகியோர் நல திட்ட உதவிகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய ஏழிலரசன், தவெக கட்சி தொடங்கிய நாள் முதலில் திமுகவை விமர்சித்து வரும் நிலையில் சினிமாவில் வேணுமானால் ஹீரோவாக அனைத்தையும் செய்ய முடியும் தவிர, மக்கள் நல திட்டங்களை மக்களுடன் இறங்கி அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள் என தெரிவித்தார்.