சோழவந்தான் :
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பு கோவில் தெரு பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
இதனால், மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி வீட்டுக்குள் வருவதால், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் வீட்டுக்குள் வந்து குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்படுகிறது.
பள்ளி செல்லும் குழந்தைகள் கழிவு நீர் கலந்த குடிநீரை குடிப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனை செல்லும் அவல நிலை ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இரண்டு நாட்களுக்குள் சரி செய்யவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி பஸ் மறியல் செய்யப் போவதாக பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
கழிவுநீர் கால்வாய் கட்டுவதில் முறைகேடு ஏற்பட்டதால் கழிவுநீர் கால்வாய் பணிகளை பாதியிலேயே விட்டுவிட்டு ஒப்பந்ததாரர் சென்று விட்டதால் கழிவுநீர் செல்ல வழி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.