Close
டிசம்பர் 12, 2024 5:03 காலை

ஆதனூர் மற்றும் பெரியஊர் சேரி ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்..!

அலங்காநல்லூர் அருகே ஆதனூர் மற்றும் பெரிய ஊர் சேரி ஊராட்சிகளில் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டம்

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஆதனூர் மற்றும் பெரிய ஊர் சேரி கிராம ஊராட்சிகளில் பிரதம மந்திரி திட்ட ஊரக மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 2023-24 நிதி ஆண்டிற்கான சமூக தணிக்கை நடைபெற்றது.

தமிழ்நாடு சமூக தணிக்கை அலங்காநல்லூர் வட்டார வள அலுவலர்p. சாரா மற்றும் கிராம வள அலுவலர்கள் சமூக தணிக்கை அறிக்கை வாசித்தனர் ஆதனூர் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா ஊராட்சி செயலாளர் மாணிக்கம் ஆகியோரும் பெரிய ஊர் சேரி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் செயலாளர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top