வாடிப்பட்டி :
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக அம்பேத்கர் 68வது ஆண்டு நினைவு தினம் வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பாக அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு, பேரூர் செயலாளர் கே. பி .அரசு விஜயார் தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலாளர் பொறியாளர் தமிழ் நிலவன், தொகுதி துணை அமைப்பாளர் வாடிப்பட்டி வளவன், மாவட்ட அமைப்பாளர் தளபதி,மாநிலச் செயலாளர் தமிழன், கம்யூனிஸ்ட் ஸ்ரீதர், மக்கள் விடுதலைக் கட்சி செல்லக்கண்ணு,
ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணைச் செயலாளர் சிறுத்தை பாலன் வரவேற்றார்.
அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் முழங்கப்பட்டது. இதில், கட்சி நிர்வாகிகள் நாகமலை, சண்முக நதி, முத்துகிருஷ்ணன், சுரேஷ் முகிலன், கார்த்திக் முருகன், செல்வம்,ஜெயலட்சுமி, கவிதா, கார்த்திகா, ஹரிஷ், விஷ்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கனி நன்றி கூறினார்.