Close
டிசம்பர் 12, 2024 8:53 காலை

மனித உரிமை நாள் உறுதிமொழி..!

மக்கள் இயக்கம் சார்பாக அம்பேத்கர் நினைவு தினம் மனித உரிமை நாள் அனுசரிக்கப்பட்டது

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக அம்பேத்கர் நினைவு தினம் மனித உரிமை நாள் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில பொருளாளர் செம்மினிபட்டி என்.பிச்சை தலைமை தாங்கினார். பூர்விக மக்கள் விடுதலைக் கட்சி நிறுவன தலைவர் செல்லக்கண்ணு முன்னிலை வகித்தார். இதில் செல்வராஜ்,ஓவியர் தமிழன் என்ற வீரமுத்து, கொல்லம்பட்டி ராசு, பொம்மி என்ற ஆண்டிச்சி உட்பட பலர் கலந்து கொண்டு மனித உரிமை நாள் உறுதிமொழி ஏற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top