வாடிப்பட்டி:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் ஒரு கோடி மதிப்பீட்டில் பேரூராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். வாடிப்பட்டி பேரூராட்சியில், ஆர்வி நகரில் அம்ரித் திட்டத்தில் புதிய பூங்கா திறப்பு விழா பொட்டல்பட்டியில், அயோத்திதாஸ் திட்டத்தின் கீழ் 37 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் மூர்த்தி புதிய கட்டடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
தொடர்ந்து, பேரூராட்சியின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டி கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், சோழவந்தான் வெங்கடேசன் எம். எல் .ஏ. பேரூராட்சி தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, சோழவந்தான் எஸ். எஸ். கே. ஜெயராமன், வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயலட்சுமி,
பேரூர் நிர்வாகி பிரகாஷ், துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்தி, ஒன்றியச் கவுன்சிலர்கள் பசும்பொன் மாறன்,சி பி ஆர் சரவணன், ரேகா வீரபாண்டி, தியாக முத்துப்பாண்டி, மாவட்ட பிரதிநிதி பேட்டை பெரியசாமி, இளைஞர் அணி வெற்றிச்செல்வன், யூனியன் துணைத் தலைவர் கண்ணன், நாச்சிகுளம் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, காலை 6 மணி முதல் பூமி பூஜைக்கான மகாயாகம் நடைபெற்றது.