சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் Indian Society of Heating, Refrigerating and Air Conditioning Engineers (ISHRAE) இணைந்து இன்று (07.12.2024) சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில், சுரங்கப்பாதை தொழில்நுட்ப கருத்தரங்கை நடத்தியது.
இந்த பிரத்யேக நிகழ்வானது சுரங்கப்பாதை காற்றோட்டம் மற்றும் காற்றோட்டம் அமைப்புகளின் புதுமையான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட வடிவமைப்பு மற்றும் செயல்பாடு குறித்த புரிதலை வழங்குவதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
இந்த கருத்தரங்கில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சுரங்கப்பாதை காற்றோட்ட அமைப்பின் வடிவமைப்பில் புதுமைகள், Variable Refrigerant Flow – VRF அமைப்புகளின் நிறுவல், சோதனை நடைமுறைகள், Heating, ventilation, and air conditioning – HVAC அமைப்பு உபகரணங்களுக்கான திறமையான வடிவமைப்பு தரநிலைகள், தேசிய கட்டிடக் குறியீட்டின்படி வடிவமைக்கப்பட்ட புதிய மின்விசிறி, பெரிய வணிக இடங்களின் தீ பாதுகாப்பு, காற்று கையாளும் அலகு வடிவமைப்பு மற்றும் சான்றிதழ் தரநிலைகள், மேற்பார்வை கட்டுப்பாடு மற்றும் தரவு கையகப்படுத்தல் மற்றும் கட்டிட மேலாண்மை அமைப்பின் கட்டமைப்பு, காற்று மற்றும் நீர் சோதனை மற்றும் சமப்படுத்தும் முறைகள் போன்றவை விவாதிக்கப்பட்டது.
கூடுதலாக, கருத்தரங்கின் ஒரு பகுதியாக, உபகரணங்கள் விற்பனையாளர்களுடன் தொடர்புடைய அமர்வுகள் மற்றும் விளக்க கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டன.
கருத்தரங்கை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா (பராமரிப்பு மற்றும் இயக்கம்), கூடுதல் பொது மேலாளர் ஹரிபிரசாத் (இயந்திர அமைப்புகள் மற்றும் GC சேவைகள்), ஆதித்யா இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சங்கரநாராயணன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் ISHRAE நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் துவக்கி வைத்தார்.