Close
டிசம்பர் 12, 2024 10:41 காலை

வாடிப்பட்டியில் மகளிருக்கு இலவச தையல் பயிற்சி..!

வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் வ.உ.சி. ஐ.வி. அறக்கட்டளை சார்பில் மகளிருக்கு ஒரு மாத கால இலவச தையல் பயிற்சி வகுப்புத் தொடங்கியது.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நகர வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தின் வ.உ.சி., ஐ.வி. அறக்கட்டளை சார்பாக மகளிருக்கு ஒரு மாத கால இலவச தையல் பயிற்சி வகுப்பு நடக்கிறது.

இதன் துவக்க விழாவிற்கு, அறக்கட்டளை கௌரவத் தலைவர் பாபநாசம் தலைமை தாங்கினார். சங்கத்தலைவர் தங்கராஜ்,அனைத்து முதலியார் வெள்ளாளர் சங்கங்களின் பேரவை மாநில அமைப்புச் செயலாளர் வெங்கடாசலம், மாரியப்பன், த.மா.க வட்டாரத் தலைவர் பால சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணைத் தலைவர் முருகவேல் வரவேற்றார். இந்த விழாவில், வெள்ளாளர் முன்னேற்றக் கழக மாநிலத் மகளிர் அணி தலைவி அன்னலட்சுமி சகிலா கணேசன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

இதில், செயலாளர் செந்தில் குமார், மகளிர் அணி தலைவி சிலம்பரசி,அங்காள ஈஸ்வரி, முத்துலட்சுமி, சரஸ்வதி, மக்கள் தொடர்பாளர் நாகமுத்து ராஜா, குப்புசாமி, சோலை பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர், முடிவில், பொருளாளர் சந்தன பாண்டி நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top