Close
டிசம்பர் 12, 2024 8:42 காலை

புத்தளி அருகே 2.5 கோடி ரூபாய் தடுப்பணையில் மழை நீர் சேமிக்க முடியாத நிலை : விவசாயிகள் கவலை..!

தடுப்பணை- மாதிரி படம்

புத்தளி அருகே ரூபாய் 2.5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறிய தடுப்பணை மழை நீர் சேமிக்க முடியாத நிலை உருவாகியதால் விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.

விவசாயிகள் மாவட்டம் என கூறப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு செய்யாறு வேகவதி ஆறு என பல ஆறுகள் பாய்ந்து ஓடுகிறது.

குறிப்பாக பாலாறு செய்யாறு ஆகிய ஆறுகளால் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு நீர் ஆதாரம் பெரிதும் கிடைத்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குறிப்பாக உத்திரமேரூர் விவசாயிகள் அதிகம் உள்ள பகுதியாக கருதப்படுகிறது. இந்நிலையில் செய்யாற்றின் குறுக்கே அனுமந்தண்டலம், மாகரல், சிலாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே அணைக்கட்டுகள் உள்ள நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வாலாஜாபாத் அடுத்த தொள்ளாழியில் ரூ 7 கோடியிலும் மற்றும் புத்தளியில் ரூ 2.5 மதிப்பீட்டில் கட்டப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு திறக்கபட்டது.

இந்நிலையில் தற்போது பெண்கள் புயல் காரணமாக செய்யாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீர் சென்று கொண்டிருக்கிறது.

இதுபோல் வீணாகும் நீரை தடுத்து சேமிக்கவே இது போன்ற சிறிய அணைக்கட்டுகளும் கட்டப்பட்ட நிலையில் போதிய வரத்து கால்வாய்கள் சீர் படாததால் புத்தளி அணைக்கட்டில் நீர் தேங்காமல் அதில் இருக்கும் நீரே மீண்டும் ஆற்றுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது வீணாக ஆற்றில் செல்வம் நீரில் சேமிக்க இயலாமல் ரூபாய் 3 கோடியில் கட்டப்பட்ட இந்த அணைக்கட்டு வீணாகி சிறிதளவு நீர் தேங்கி விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

திட்டம் தொடங்குவதற்கு முன்பே முறையான வரத்துக்கு கால்வாய்களை சரி செய்த பின் இது போன்ற திட்டங்களை துவங்க வேண்டும் எனவும் இது போல் ரிவர்ஸ் சிஸ்டத்தில் நீர் செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top