Close
ஏப்ரல் 2, 2025 3:32 காலை

காரியாபட்டி அமலா தொடக்கப்பள்ளியில் நல உதவிகள் வழங்கும் விழா..!

காரியாபட்டி அமலா தொடக்கப்பள்ளியில் நடந்த நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

காரியாபட்டி :

விருதுநகர் மாவட்டம் , காரியாபட்டி அமலா தொடக்கப்பள்ளியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, கல்வி உபகரணங்கள், விளையாட்டு சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளி தாளாளர் அருட் சகோதரி. மார்கரேட் மேரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அருட்சகோதரி. விக்டோரியா வரவேற்றார். பேரூராட்சித் தலைவர் செந்தில் மாணவர் களுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், சத்துணவு பாத்திரங்கள், மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

விழாவில் , மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை அமைப்பாளர் முகமது முஸ்தபா, கவுன்சிலர் சரஸ்வதி பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மனோஜ் பிரபாகர், மாவட்ட சுற்றுச்சூழல் அணி – அமைப்பாளர் சரவணன், தகவல் தொகுதி, இளைஞரணி அமைப்பாளர் ராமகிருஷ்ணன் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சேதுராமன், துணை அமைப்பாளர்கள் சூரியா,ராஜ பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top