மதுரை :
மதுரை அருகே சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மதுரை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து, மதுரை மாவட்ட செயலாளர் பொன் சுசீந்திரன், மதுரை மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:
மதுரை மாவட்டம், மேலூர் அருகே சுரங்கம் அமைக்க மாநில அரசாங்கம் வருவாய்த்துறை மூலமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இச் சுரங்கத்தை அமைக்கக்கூடாது என்று கூறிய அவர் இப்பகுதி மக்கள், விவசாயிகள் கடும் ஆட்சேபத்தை தெரிவித்துள்ளனர்/ இந்த நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய நிலக்கரித்துறை அமைச்சரிடம், இது குறித்து ஆட்சேபம் அடங்கிய மனு அளித்து நடவடிக்கையில் உள்ளது.
இந்நேரத்தில், அரசு சுரங்கம் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என மதுரை மாவட்ட பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மனு ஒன்றை அளித்துள்ளனர்.