ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை களப்பணியாளர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு முன் வைத்த கோரிக்கைகளை நில அளவை இயக்கத்தாலும் அரசாலும் தீர்வு காணப்படாமல் தொடர்ந்து நிலுவை இருந்து வருகிறது.
மேலும் துறையில் ஏற்படும் நவீன மையத்தால் துடைக்கும் களப்பணியாளர்களுக்கும் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்க நாமக்கலில் நடைபெற்ற மாநில செயற்குழு குழுவின் படி மூன்று கட்ட போராட்டங்களை அறிவிக்கப்பட்டது.
அதில் முதல் கட்டமாக இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நில அளவை களப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பணிபுரியும் நில அளவை பணியாளர்கள் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் தங்கள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன், வாலாஜாபாத் வட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் களப்பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கை கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும் மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்கவும் கோருதல் சிறப்பு திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் ஊழியர்கள் மீது பெரும் பணி சுமையை சுமத்துவதையும் ஆய்வு என்ற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை உடனே அரசு கேட்க வேண்டும் எனவும்,
தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டமாக 19ஆம் தேதி ஒரு நாள் அடையாள தற்செயல் விடுப்பும் அதனை தொடர்ந்து தேவைப்படும் நிலையில் 48 மணி நேர வேலை நிறுத்தவும் நடைபெறும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் போராட்டதினால் இன்று நில அளவை அலுவலகத்தில் பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளது.