மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் திறன்பட புள்ளி விவரங்களை அளித்த அனைத்து அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்த ஆட்சியர் கலைச்செல்வி..
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணையை மேற்கொள்ள துவங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று குறைகள் குறித்த மனுக்களைப் பெற்று உடனடியாக துறை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு உதவிடும் அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஏராளமான தங்கள் பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைத்த நிலையில் அதனையும் உரிய அலுவலருக்கு பரிந்துரை செய்தார்.
இதனை தொடர்ந்து பேசிய ஆட்சியர் கலைச்செல்வி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மாவட்ட கண்காணிப்பு வளர்ச்சி குழு கூட்டத்தில் குழு தலைவர் டி ஆர் பாலு எழுப்பிய கேள்விகளுக்கு திறன் பட பதிலளித்தும், பொதுமக்களின் நல திட்டங்களின் நிலைகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்து மாவட்டம் மேலும் சிறந்து விளங்க சிறந்த முறையில் மக்கள் பணியாற்ற வேண்டுமென வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் இக்கூட்டம் குறுகிய காலகட்டத்தில் நடைபெற்ற நிலையில் திறன் பட புள்ளி விவரங்களை சேகரித்தும் திட்டங்களின் நிலை குறித்து தெளிவாக அலுவலர்கள் எடுத்துரைத்தது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதால் அனைத்து அரசு அலுவலர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் மேலும் இதே போன்று பல்வேறு நிலை கூட்டங்களிலும் இதே நிலை தொடர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.