Close
டிசம்பர் 12, 2024 6:42 மணி

வேலூரில் பார்சல் லாரி தீப்பிடித்து எரிந்து சேதம்

வேலூர் அடுத்த கருக்கம்புத்தூர் பகுதி பெங்களூர் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பார்சல் சர்வீஸ் லாரி திடீர்ரென தீப்பிடித்து எரிந்து சேதமானது.

மேட்டூர் பார்சல் சர்வீஸுக்கு சொந்தமான லாரி, திருநெல்வேலியிலிருந்து பார்சல்களை ஏற்றிக்கொண்டு வேலுருக்கு சென்றபோது கருகம்புத்தூர் அருகே லாரியின் என்ஜினில் திடீரென தீப்பற்றியது.

உடனே சுதாரித்துக் கொண்ட லாரி டிரைவர் ராமகிருஷ்ணன், லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் லாரி மளமளவென எரியத் தொடங்கியது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த லாரியை தண்ணீரை பீச்சியடித்து அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இச்சம்பவம் குறித்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top