Close
டிசம்பர் 12, 2024 9:31 காலை

தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை அலுவலர்கள் போராட்டம்

நில அளவைபணியாளர்களின் 9 ஆம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரி மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் களப் பணியாளர்கள் செய்யும் அனைத்து விதமான பணிகளையும் கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும், மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும். உதவி இயக்குநர், கூடுதல் இயக்குநரின் பணிகளையும், கடமைகளையும் மண்டலத் துணை இயக்குநர், இணை இயக்குநர் (நிர்வாகம்), இயக்குநர் ஆகியோர்களுக்கு மாற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

சிறப்புத் திட்டங்கள் மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் பணிகளுக்கு கால நிர்ணயம் வழங்காமல் ஊழியர்கள் மீது பெரும் பணிச் சுமையை சுமத்துவதையும், நியாயமான தள்ளுபடிகளுக்கு ஆய்வு என்கிற பெயரில் ஊழியர்களை கடுமையாக நடத்துவதையும் கைவிடவேண்டும்.

தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியினை பெற்று தகுதியுள்ள நில அளவர்களுக்கு பதவி உதவி உயர்வு வழங்கவேண்டும்.

சிறப்பு திட்டங்களில் நிலம் எடுப்புப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களில் நில அளவைக் களப் பணியாளர்களை பதவி உயர்வு வழங்கவேண்டும். தமிழ்நாடு முழுவதும் அனைத்துத் துறைகளிலும் அரசாணை எண் 10-ஐ கடைபிடிக்கவும் பொது மாறுதல் நடைமுறையை நில அளவைப் பதிவேடுகள் துறையில் மாற்றி அமைக்க எடுக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

நில அளவைப் பதிவேடுகள் துறையில் மிக முக்கியமான அடிப்படை பணியாக உள்ள புல உதவியாளர்கள் பணியிடங்களை தனியார் முகமையின் மூலம் அத்துக் கூலிக்கு நியமனம் செய்வதைகைவிட்டு கால முறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய வேண்டும்.

ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றிப்பின் நிலுவை கோரிக்கைகள் மீது உரிய உத்தரவு வெளியிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் வலியுறுத்தினர்.

தருமபுரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு கோட்ட செயலாளர் சின்னராசு தலைமை வகித்தார்.

மாவட்ட தலைவர் வெங்கட்டேசன், மாவட்ட செயலாளர் பிரபு,பொருளாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

அரூரில் கோட்டதுணைத்தலைவர் விஸ்வநாதன், பாப்பிரெட்பட்டியில் கோட்ட பொருளாளர் சீனிவாசன், பாலக்கோட்டில் கோட்ட துணைத்தலைவர் துரை, பென்னாகரத்தில் மாவட்ட இணைசெயலாளர் தவமுனி, நல்லம்பள்ளியில் கோட்ட பொருளாளர் ரகு, காரிமங்கலத்தில் பொன்அரிகரன் ஆகியோர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் நில அளவைத் துறையில் ஆய்வாளர், துணை ஆய்வாளர், சார் ஆய்வாளர், குருவட்ட நில அளவையர், நில அளவையர் என மொத்தம் 100 பேரில் 97 பேர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top