Close
ஏப்ரல் 3, 2025 3:21 காலை

தென்காசி அரசு பேருந்து கடையநல்லூர் மசூதிக்குள் புகுந்து விபத்து..!

மசூதிக்குள் புகுந்த அரசு பேருந்து

தென்காசி மாவட்டம், புளியங்குடியில் இருந்து தென்காசி நோக்கி சென்ற புளியங்குடி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்தை பேருந்து ஓட்டுநர் சரவணகுமார்  தென்காசியை நோக்கி இயக்கி வந்த நிலையில் எதிர்பாராத விதமாக திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கடையநல்லூர் முகைதீன் ஹாஜி பள்ளிவாசல் வாயில் முன்பு நின்றிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி மசூதிக்குள் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் விசாரணையில் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை சாதுரியமாக இயக்கியதால் பேருந்து பள்ளிவாசல் முன்பு மோதியதாகவும் புறப்படுகிறது.

மேலும் பேருந்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் காயம் ஏதுபின்றி தப்பினர். அரசு பேருந்து பள்ளிவாசல் முன்பு மோதும் பொழுது அப்பகுதியில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.பேருந்து ஓட்டுனர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

இச்சம்பவம் நடந்த இடம் பஜார் பகுதி என்பதால் அப்பகுதியில் அதிகப்படியான மக்கள் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top