மதுரை :
மது போதையில் அரசு பேருந்து நடத்துனர் கட்டு கட்டாய் பயணிகளுக்கு வழங்க வேண்டிய பஸ் டிக்கெட்டுகளுடன் சாலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பைபாஸ் சாலை, நேரு நகர் பிரதான சாலையில் இரவு 9 மணி அளவில் காக்கி சட்டை பேண்ட் உடன் தள்ளாடியபடியே ஒருவர் வந்து கொண்டிருந்தார். திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து அவரது தாலியின் பின் பகுதியில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக, அப்பகுதி மக்கள் அவரை ஓரமாக அமர வைத்து பார்த்தபோது அவர் நல்ல மது போதையில் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை சோதித்த போது அவர் கையில் ஒரு பட்டன் செல் இருந்தது டயல் லிஸ்ட் வைத்து ஒவ்வொருவருக்காக போன் செய்தபோது, அவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மதுரை பொன்மேனி கிளையில் நடத்துனராக பணியாற்றி வருவது தெரிய வந்தது.
டிப்போ மேலாளர் சார் அவர் கையில் பையும் ஏதும் உள்ளதா என கேட்டார். ஆம் என்று சொன்னோம் பத்திரமாக எடுத்து வையுங்கள் சார். அந்தப்பையில் பயணிகளுக்கான டிக்கட்டுகள் உள்ளது. அதை பத்திரப்படுத்தி வையுங்கள் என்று டிப்போ மேலாளர் கூறினார்.
அவர் வைத்திருந்த பையை அருகே இருந்த கடை ஒன்றில் பத்திரமாக வைத்தனர். பொன்மேனி டிப்போவில் இருந்து ஓட்டுனர் ஒருவர் அங்கு வந்தார். அந்த நடத்துனர் வைத்திருந்த பையை வாங்கி வைத்துக் கொண்டார்.
அந்த பையில் அடுத்தநாள் காலை 5.30 மணிக்கு பணியில் சேர்வதற்கான டிக்கட்டுகள் இருந்தன.பல ஆயிரம் மதிப்புள்ள டிக்கெட்டுகள். இவைகள் காணாமல் போயிருந்தால் அவருக்கு வேலையே காலியாகி இருக்கும் என்று அந்த ஓட்டுநர் வருத்தப்பட்டார்.
அந்த ஓட்டுனரும் போதையில் கிடந்த நடத்துனரை திட்டித்தீர்த்தார். குடிகாரர்கள் அவர்களாகவே திருந்தினால்தான் உண்டு.