Close
டிசம்பர் 12, 2024 6:36 காலை

ஆக்கிரமிப்புகளை அதிகாரிகளே அகற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை..!

உசிலம்பட்டியில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம்.

உசிலம்பட்டி :

ஊரணி மற்றும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார்களுக்காக காத்திருக்காமல், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களே நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என உசிலம்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜ்குமார், துணை வட்டாட்சியர்கள் தாணு மூர்த்தி, மகேந்திர பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், உசிலம்பட்டி 58 கால்வாய் சங்க விவசாயிகள், மதுரை மாவட்ட நன்செய்,புன்செய் விவசாய சங்க விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்க விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஊரணி மற்றும் ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற புகார்களுக்காகவும், மனுக்களுக்காகவும் காத்திருக்காமல் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களே நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை மீட்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் அதிகாரிகளிடம் முன்வைத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top