காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழங்குடி இன மக்களுக்கு வீடு கட்டும் திட்டம் ஐந்து தாலுகாவில் நடைபெற்று தற்போது வசித்து வருகின்றனர் .
மேலும் பல்வேறு ஊராட்சிகளிலும் புதிய குடியிருப்புகளை கட்டும் பணி வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மூலம் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் ஆர்ப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டை பகுதியில் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக முப்பதுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.
அவர்களுக்கு சாலை வசதி மற்றும் போர்வெல் மூலம் குடிநீர் வழங்கப்பட்ட நிலையில் தற்போது செய்யாற்றில் இருந்து குடிநீர் வழங்கும் பணி சுமார் 5,70 ஆயிரம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டது.
இதே போல் அப்பகுதியில் வசிக்கும் 15 நபர்களுக்கு பிஎம்.ஜன்மேன் திட்டத்தின் கீழ் தல 5 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டும் பணி ஆணை வழங்கும் விழா அப்பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் ராசி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பரசுராமன் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கலந்து கொண்டு 15 நபர்களுக்கு பணியாணை மற்றும் வீடு கட்டும் பணிகளை துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் செய்யாற்றில் இருந்து குடிநீர் வழங்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் , காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார், துணைத் தலைவர் திவ்யப்பிரியா , திமுக ஒன்றிய செயலாளர் குமணன் மற்றும் திமுக ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.