Close
டிசம்பர் 11, 2024 11:44 மணி

மகாகவி பாரதி பணியாற்றிய சேதுபதி பள்ளியில் பிறந்தநாள் கோலாகலம்..!

பாரதியார் பிறந்தநாளில் சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பாரதியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

மதுரை :

மகாகவி பாரதி பாரதியார் அவர்களின் 143 ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவர் பணியாற்றிய, மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள், மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

சேதுபதி மேல்நிலைப்பள்ளி சார்பில், மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் விக்டோரியா கௌரி, மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள். நிகழ்விற்கு, மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி தாளாளர் வழக்கறிஞர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். சேதுபதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன் மதுரை கல்லூரி வாரிய உறுப்பினர் இல. அமுதன் தொழிலதிபர் கிருஷ்ணன் மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

மதுரை பாரதி யுவகேந்திரா சார்பில், மகாகவி பாரதியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில், ஆடிட்டர் சேது மாதவன், மதுரை காஞ்சி சங்கர மடம் செயலாளர் வெங்கடேசன், மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க உறுப்பினர் ஆதவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மேலும், அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு தாம்ப்ராஸ் அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்பினர் இன்று அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.நிகழ்வில், மகாகவி பாரதியாராக ஒருவர் வேடமிட்டு வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது பலரை மெய்சிலிர்க்க வைத்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top