மதுரை :
தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உலக அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டி-2024 ல் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற செல்வி.அமுல்யா ஈஸ்வரி மற்றும் செல்வன்.வருண் ஆகியோரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, பாராட்டி கௌரவப்படுத்தினார்.
உலக அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் (World Ability Sports Youth Games – 2024) டிசம்பர் 1-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பாரா விளையாட்டு 15 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இந்தியாவில் இருந்து 60-க்கும் பாரா வீரர், வீராங்கனைகள் தடகளம், பளுதூதூக்குதல், டேபிள் டென்னிஸ், வீல்சேர் பௌச்சியா போன்ற போட்டிகள் ஊனத்தின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில் இந்திய அணி 23 தஙகப் பதக்கம், 26 வெள்ளிப் பதக்கம், 19 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 68 பதக்கம் பெற்று பதக்க தரவரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்தது.
இதில், மதுரை லேடி டோக் கல்லூரி மாணவி செல்வி.அமுல்யா ஈஸ்வரி 1500 மீ, 800 மீ ஓட்ட போட்டியில் 2 தங்கப் பதக்கமும், 400 மீ ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும் மற்றும் மதுரை சட்ட கல்லூரி மாணவர் செல்வன்.வருண் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும், வட்டு எறிதலில் வெண்கலப் பதக்கமும் பெற்று சாதனை செய்துள்ளனர்.
பதக்கம் பெற்று நாடு திரும்பிய பாரா தடகள வீரர், வீராங்கனை இருவரையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., பாராட்டி கௌரவப்படுத்தினார்.
இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு விளைாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளைாயட்டு இளைஞர் நல அலுவலர் ராஜா, மாற்றுத்திறன் வீரர்களின் பயிற்சியாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.