டாஸ்மாக் கடையின் ஷட்டரை அறுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுளளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த நேமலூர் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மார்க் காலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடைக்கு வந்த மர்ம ஆசாமி ஒருவர் டாஸ்மாக் கடையில் இரும்பு ஷட்டரை இரும்பருப்பான் இயந்திரத்தின் மூலம் அறுத்து துளையிட்டு நுழைந்து கடையில் இருந்த 12 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை திருடி சென்றார்.
இது தொடர்பாக பாதிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையில் இரும்பு கதவை இரும்பு இருப்பான் மூலம் துளையிடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை குறியிட்டு கடையின் சுவரைத் துளையிட்டு கொள்ளையடிப்பதும் இரும்பு கதவுகளை உடைத்து கொள்ளையடிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. போலீசார் ரோந்துப் பணியை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.