Close
டிசம்பர் 12, 2024 8:02 காலை

ஆமை வேகத்தில் நடக்கும் மேம்பாலம் கட்டும் பணியால் பொது மக்கள் அவதி..!

குறுகிய சாலையில் வரும் வாகனங்கள்

மதுரை:

மதுரை நகரில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால், அவதியூறுகின்றனர். பொதுமக்கள் மதுரை நகரில், சிவகங்கை செல்லும் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பால பணியானது ஆமை வேகத்தில் நடைபெறுவதால், போக்குவரத்திற்கு பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை போக்குவரத்து போலீசார் பாலம் பணி நடைபெறுவதால், போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

இதனால், பொதுமக்கள் தெருக்களில் வரும் ஆட்டோக்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் என கடும் நெரிசலுக்கு உள்ளே பயணிக்கின்ற நிலை ஏற்படுகிறது. மதுரை மேலமடை வி.ஏ.ஓ. அலுவலகம் எதிரே போலீஸ் பூத் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் மதுரை நகரில் ஆட்டோக்கள் எண்ணிக்கை அதிகரிகரித்து வருவதால், ஆட்டோக்கள் சாலைகளில் அதிக வேகமாக செல்வதாலும், பொதுமக்கள் அஞ்சும் நிலை ஏற்படுகிறது.

இது குறித்து, போக்குவரத்து போலீசார் கண்டும் காணாமல் இருப்பதாக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை நகரில் அண்ணா நகர், அண்ணா நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிறுத்தம் அருகே ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தி பொதுமக்களை ஏற்றி வருகின்றனர்.

இதனால், பஸ்ஸில் பயணிக்கும் பொதுமக்கள் பெரும் இடையூறு ஏற்படுகிறது. இது குறித்து, மதுரை போக்குவரத்து துணை ஆணையர், உதவி ஆணையர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்து, மதுரை நகரில் பெர்மிட் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை நகரில் இரண்டு சக்கர வாகனத்தில் தலைக் கவசம் இன்றி வருவோரை பாய்ந்து பிடிக்கும் போக்குவரத்து போலீஸார், மதுரை மதிச்சியம், அண்ணாநகர், அண்ணா நிலையம், கோரிப்பாளையம் பகுதிகளில் விதிகளை மீறி இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top