Close
ஏப்ரல் 2, 2025 10:34 காலை

திருத்தணி முருகன் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்..!

திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்.

திருத்தணியில் கொட்டும் மழையிலும் முருகன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த நடிகர் சிவகார்த்திகேயன். அப்போது அங்கிருந்த பக்தர்கள் மற்றும் அச்சகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழக மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற முருகப்பெருமானை தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை முதல் திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்தார்.

பின்னர் அவர் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மலர்மாலை விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அப்போது அங்கு இருந்த பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top