சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் எரி 25.51 சதுர கி.மீ பரப்பளவில் காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துர் வட்டத்தில் அமைந்துள்ளது.
எரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24.00 அடியாகும். இதன் முழுக்கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும்.
தொடர் கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் குன்றத்தூர் பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.
இந்நிலையில் இன்று காலை 06.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 23.29 அடியாகவும், கொள்ளளவு 3453 மில்லியன் கன அடியாகவும் மற்றும் நீர் வரத்து வினாடிக்கு 6498 கன அடியாகவும் உள்ளது.
ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. எனவே அணையின் நீரினை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை அடையாற்றின் வெள்ள தணிப்புக்காக (Flood Moderation in Adayar River) எரியிலிருந்து இன்று காலை 08.00 மணியளவில் வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
எரிக்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகபடியாகும் நிலையில் கூடுதல் உபரிநீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.
எனவே, எரியிலிருந்து நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்துர் காவனுர், குன்றத்துர், திருமுடிவாக்கம் வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் நீர் இருப்பு நீர் வெளியேற்றும் பணிகளை ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை மற்றும் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்டோர் மேல் சென்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
கரையோர மக்களுக்கு உரிய முறையில் நீர் வெளியேற்றும் குறித்த தகவல்களை தருமாறு கேட்டுக் கொண்டார்.