அப்பா சொன்னதை கேட்காத பிள்ளை அணில் பிள்ளை ஸ்டாலின்.. எச் ராஜா என காஞ்சிபுரத்தில் பேட்டி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற வழக்கு ஒன்றின் பாஜக தேசிய தலைவர் எச். ராஜாவுக்கு தண்டனை அறிவித்தது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற வழக்கறுதீஸ்வரர் கோயிலுக்கு பாஜக தேசிய தலைவர் எச். ராஜா வருகை புரிந்து சிறப்பு அர்ச்சனை மற்றும் தரிசனம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசுகையில், எனது தனிப்பட்ட முறையில் சாமி தரிசனம் மேற்கொள்ள வந்ததாக தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோது ,
அவரின் தந்தை நெஞ்சுக்கு நீதி என்ற பெயரில் எழுதியதில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஒப்புக்கொண்ட இடையில் அவரது மகனான ஸ்டாலின் அவரது அப்பா பேச்சைக் கேட்கவில்லை எனவும், அதை முதலில் படித்து புரிந்து கொள்ளாத அணில் பிள்ளையாக உள்ளார் என தெரிவித்தார்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப் பெருந்தகை கேள்வி பதில் நிகழ்ச்சியில்,
எனது தொகுதியான வரதராஜபுரம் பகுதியில் முழுமையான பகுதியாக உருவாக்க வேண்டும் எனவும், அதனை தவிர்த்தால் , வரும் தேர்தலில் எனக்கு போட்டியிட பெரும் பின்னடைவு ஏற்படும் என கூறியதை குறித்து கேட்ட போது,
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே தமிழக அரசுக்கு சென்னை மட்டும் குறிக்கோளாக கொண்டு மழை நீர் வடிப் பணிகளை செய்ய வேண்டாம் எனவும், பிற மாவட்ட பகுதிகளிலும் இதுகுறித்து கவனம் கொள்ள வேண்டும் என கூறியிருந்த நிலையில் அதனை முற்றிலும் ஏற்காத நிலை தான் தற்போது பிற மாவட்டங்களில் கண்கூடாக பார்க்கிறோம் என தெரிவித்தார்.