Close
டிசம்பர் 15, 2024 11:45 காலை

18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் : தமிழக வீரர் குகேஷ் சாதனை..!

செஸ் போட்டியில் குகேஷ்

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

உலக செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் தமிழக வீரர் குகேஷ் மற்றும் நடப்பு டிங் லிரென் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. 13வது சுற்று வரை இருவரும் சமபுள்ளிகளில் இருந்ததால் டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று நடந்த 14வது சுற்றில் அற்புதமாக விளையாடிய குகேஷ் 58வது நகர்த்தலில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தினார்.

இதன் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்லும் இராண்டவது தமிழக வீரர் என்ற பெருமையை குகேஷ் பெற்றுள்ளார். மேலும் குகேஷ் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top