Close
ஏப்ரல் 4, 2025 3:35 மணி

சோழவந்தான் பிஎஸ்என்எல் அலுவலக மரம் முறிந்து விழுந்து மின்கம்பி அறுந்தது : நூலிழையில் உயிர் தப்பிய வீட்டினர்..!

வீட்டின் மீது விழுந்த மரத்தால் மின் வயர் அறுந்து கிடக்கிறது.

சோழவந்தான் :

மதுரை மாவட்டம், சோழவந்தான் நகரி ரோட்டில் குடியிருந்து வரும் விஜய நாராயணன்(55). இன்று அதிகாலை முதல் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இவர் வீட்டு அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் உள்ள காய்ந்த மரம் முறிந்து விழுந்தது. ஒடிந்து விழுந்த மரம் மின் வயரில் விழுந்து இவர்களது வீட்டில் விழுந்தது. சத்தம் கேட்டு விஜயநாராயணன் எழுந்து வந்து பார்த்த பொழுது மரம் முறிந்து விழுந்து கிடந்தது.

மேலும் மின் வயர் அறுந்து விழுந்து கிடந்ததை பார்த்து மின்சார அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் இப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு தற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது

இதுகுறித்து விஜயநாராயணன் கூறும் பொழுது :

எங்களது அப்பா சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பாக இடம் வாங்கி வீடு கட்டி தற்போது நானும் எங்களது அண்ணனும் தனித்தனியாக குடியிருந்து வருகிறோம். எங்கள் வீட்டு அருகே சுமார் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதன் நடுவே மெயின் ரோடு அருகே பிஎஸ்என்எல் அலுவலகம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு தலைமை இடமாக இயங்கிய பிஎஸ்என்எல் அலுவலகம் தற்போது வத்தலகுண்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சோழவந்தான் உள்பட இப்பகுதியில் உள்ள bsnl இணைப்பு வைத்திருப்பவர்கள் பணம் கூட இங்கு செலுத்த முடியாத பாழடைந்த அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இங்கே ஒருவர் மட்டும் வந்து செல்கிறார். இந்த அலுவலகம் முறையாக செயல்படாததால் பராமரிக்கப்படவில்லை. இதனால் இங்குள்ள மரங்கள் பட்டுப் போய் அருகில் உள்ள வீடுகளில் விழுந்து சேதம் அடையக்கூடிய நிலையில் உள்ளது.

இதுபோக இந்த அலுவலகத்தில் பெரும்பாலான காம்பவுண்ட் சுவர்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பராமரிப்பு இல்லாததால் இப்பகுதி விஷ பூச்சிகள் வாழக்கூடிய இடமாக திகழ்கிறது. இதுகுறித்து இப்பகுதியில் குடியிருப்பவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பலமுறை தெரிவித்தும் பட்ட மரத்தை அகற்றவில்லை.

பாம்பு போன்ற விஷ பூச்சிகளை அப்புறப்படுத்தவில்லை. இதனால் தினசரி இப்பகுதியில் குடியிருப்பவர்கள் பயத்துடன் வாழ்ந்து வருகிறோம்.

தொடர்ந்து மழை பெய்ததால் எங்கள் வீட்டருகே உள்ள பிஎஸ்என்எல் வளாகத்தில் உள்ள பட்டுப்போன மரம் எங்கள் வீட்டின் மீது விழுந்து மின் வயர்கள் துண்டிக்கப்பட்டது. சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தேன் நல்ல வேலை மரத்தையோ அருந்து விழுந்த மின் வயரையோ எடுக்கவில்லை.

உடனடியாக மின்சார அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் வந்து மின் இணைப்பை துண்டித்து சென்றனர். எங்கள் வீட்டிலும் எங்கள் அண்ணன் வீட்டிலும் உள்ளவர்கள் விபத்து நடந்த நேரத்தில் எழுந்து வந்திருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். ஆகையால் பிஎஸ்என்எல்அலுவலக வளாகத்தில் உள்ள பட்டுப்போன மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். அந்த பகுதியை தூய்மைப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top