Close
டிசம்பர் 18, 2024 10:57 மணி

சோழவந்தானில் டிடிவி தினகரன் பிறந்தநாள் : ஜெனகை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை..!

அமமுக பொதுச்செயலர் தினகரன் பிறந்தநாளில் ஜெனகை மாரியம்மன் கோயிலில் செட்டப்பு பூஜை செய்யப்பட்டது.

சோழவந்தான்:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டிடி வி தினகரன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தான் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஜெனகை மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் திரவியம் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ரிஷபம் கேவி ராமநாதன், முன்னாள் மீனவர் அணி மாவட்ட செயலாளர் முனைவர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் இணைச் செயலாளர் ரபீக், பொருளாளர் மாரியப்பன், அவைத்தலைவர் ராமகிருஷ்ணன் பிரதிநிதி மாங்கனி அசோக் குமரன், ஒன்றிய துணைச் செயலாளர் மீனாட்சி சுந்தரம், பன்னீர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top