Close
மார்ச் 29, 2025 10:33 காலை

குலமங்கலத்தில் தமிழக வெற்றிக்கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்..!

தவெக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.

மதுரை :

மதுரை வடக்கு மாவட்டம், கிழக்கு தொகுதியில், மேற்கு ஒன்றிய குலமங்கலத்தில் தமிழக வெற்றி கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடந்தது.

இந்த கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர், மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் அன்பன் கல்லானை தலைமை தாங்கினார். கனகவேல், ராமநாதன்,எழும்பூர்மருது, பனிநாதன், மணிகண்டன், மன்னாரு, மணி, சாய் அரவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குஷி மார்நாடு வரவேற்றார். இந்த கூட்டத்தில்,பாண்டித்துரை, தேன்மொழி ஆகியோர் கட்சி கொள்கைகள் பற்றி விளக்கி பேசினார்கள். இதில், தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து விலகி 100 பேர் மாவட்ட தலைவர், மாநில ஒருங்கிணைப்பாளர் விஜய் அன்பன் கல்லானை முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்.

இதில், காயம்பட்டி முத்துராஜ், வீரசெல்வம், வடுகபட்டி தளபதி சிவா, பழனிசாமி ,லெட்சுமிபுரம் ஜெய கண்ணன், சந்திரன் திருப்பாலை கண்ணன், ஜெய ஹரிஸ் மாலை பட்டி ஜெகதீசன், அருள்ராஜ் பூதகுடி வினோத், எ.கே.வினோத், கணபதிபுரம் சந்தோஷ் உள்ளிட்டோர் மற்றும் கிழக்குத் தொகுதி, மேலூர், சோழவந்தான், மத்திய வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் தமிழாசிரியர் பாஸ்கர் நன்றி கூறினார். பொதுக்கூட்ட ஏற்பாடுகளை, குஷி மார்நாடு, வினோத் குமார், மணிமாறன், விஜய் செந்தில், பழனி குமார் கௌதம் , மணி தளபதிப்ரியன் நடராஜன், ஜெயின், ஈஸ்வரன், விஷால், பாபு, ராமகிருஷ்ணன் செய்திருந்தனர். நிகழ்ச்சியினை, வடக்கு மாவட்ட நிர்வாகி முனாப் தொகுத்து வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top