Close
டிசம்பர் 15, 2024 1:06 காலை

சேலத்தில் வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலத்தில் குப்பை வரி உயர்வை திரும்பப்பெறக்கோரி வணிகர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் கோட்டை மைதானத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு  மற்றும் சேலம் மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழகம் தழுவிய  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த அர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் வர்க்கீஸ், இளையபெருமாள், பொருளாளர் சந்திரதாசன் மற்றும் நிர்வாகிகள் செல்வக்குமார், திருமுருகன், தங்கவேல், ராஜேந்திரன், பொன்னுசாமி, சுந்தர்ராஜ், பெனின்ஜாக்சன் உள்பட 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு, கடைகளின் வாடகை மீதான 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பை திரும்பப் பெற வேண்டும். சேலம் மாநகராட்சி வணிக நிறுவனங்களுக்கு சொத்து வரி பலமடங்க உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும்.

மாநில அரசு கொண்டுவந்துள்ள ஆண்டுதோறும் 6 சதவீதம் கூடுதல் சொத்து வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும். வணிக உரிம கட்டண உயர்வு மற்றும் தொழில் வரி உயர்வினை ரத்து செய்ய வேண்டும். வணிக நிறுவனங்களுக்கு குப்பை வரி உயர்த்தப்பட்டுள்ளதை திருப்பப் பெறவேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top