Close
டிசம்பர் 15, 2024 12:34 மணி

காஞ்சிபுரம் அருகே மழலையர் பள்ளிக்கு செல்ல மறுக்கும் பழங்குடியினர் பிள்ளைகள்..!

பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருக்கும் குழந்தைகள்

காஞ்சிபுரம் அருகே மழலையர் பள்ளிக்கு செல்ல மறுக்கும் பழங்குடியினர் பிள்ளைகள். ஆனால் அவர்களது பெற்றோரும் அலட்சியமாகவே உள்ளனர். அதனால் மாவட்ட நிர்வாகம் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி அளிக்கும் வகையில் மழலை பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வரை கற்றலின் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வுகளும், கல்வி இலவச உபகரணங்களும், கல்வி உதவித்தொகை என பல்வேறு வகையில் வழங்கி வருகிறது.

ஆனால் இதனை பழங்குடியின மக்களின் பிள்ளைகள் பள்ளி செல்லாமல், வேலை நிமித்தமாக செல்லும் பெற்றோர்களுடனே பல்வேறு பகுதிகளுக்கு உடன் செல்வதால் கல்வி கற்காமல் உள்ளனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆர்ப்பாக்கம் ஊராட்சியின் ஆழ்வார்பேட்டை பகுதியில் பழங்குடி இன மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. பல தலைமுறையாக இப்பகுதியில் வசித்து வரும் இவர்களின் பிள்ளைகள் மழலையர் கல்வி கற்க குறைந்த பட்சம் ஒரு கிலோ மீட்டர், தொடக்கப் பள்ளி கற்க இரண்டு கிலோமீட்டர் செல்லும் நிலையில் இதனை தவிர்த்து வருகின்றனர்.

இதுகுறித்து பெற்றோர்களிடம் கேட்டபோது, அங்கன்வாடி மையம் செல்ல குழந்தைகள் மறுப்பதாகவும் வேலை நிமித்தமாக தாங்கள் சென்று விடுவதால் அங்கன்வாடியில் இருந்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர யாரும் இல்லாததால் தங்களுடனே அவர்கள் வந்து விடுகின்றனர் என தெரிவிக்கின்றனர்.

இந்த ஊராட்சி மன்ற தலைவரும் ஒரு பழங்குடியின பெண் என்பதும், ஏனோ இவர்களின் நிலையை மாற்ற முயற்சிக்காதது வருத்தம் அளிக்கிறது

அனைவருக்கும் கல்வி என்ற நிலையில் இவர்களுக்காக வழங்கப்படும் சலுகைகளை கல்விகள் மூலம் எளிதாக பெற இயலும் என்பதை இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த பகுதி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top