Close
ஜனவரி 5, 2025 8:57 மணி

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை : 16ம் தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு..!

வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை - கோப்பு படம்

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுகிறது. இதனால் வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.

இந்த காற்றழுத்த தாழ்வுநிலை படிப்படியாக வலுவடைந்து மேற்கு, வடமேற்கில் நகர்ந்து, டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களை நெருங்க வாய்ப்புள்ளது. இதனால் வரும் 16ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் இன்றும்(14ம் தேதி) , நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை மறுநாள் அதாவது 16ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top