Close
டிசம்பர் 14, 2024 2:03 மணி

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம்..!

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்ற விசாரணையில் வழக்குகளுக்கு உடனுக்கான தீர்வு காணப்பட்டது.

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் எனும் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி துவங்கியது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் தமிழ் நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படியும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர்/முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, திருமதி J.மேவிஸ் தீபிகாசுந்தரவதனா, செங்கல்பட்டு, அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் இன்று 14.12.2024 காலை 10.00 மணியளவில் காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (National LokAdalat) தேசிய மக்கள் நீதிமன்றத்தை காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி T.சந்திரசேகரன் , அவர்களின் வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சி துவங்கியது.

நிகழ்ச்சியில் திரு M. வசந்தகுமார், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், காஞ்சிபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின், தலைவர் (பொறுப்பு) கூடுதல் சார்பு நீதிபதி, காஞ்சிபுரம், திரு T.திருமால், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி, திரு J. வாசுதேவன் நீதித்துறை நடுவர் எண்-II., நீதிபதி சந்தியாதேவி காஞ்சிபுரம், வழக்கறிஞர்கள் கண்ணன், பத்மநாபன், சத்தியமூர்த்தி, மணிமாறன், ஜான், துரைமுருகன் ஆகியோர்கள், காப்பீட்டு நிறுவன வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

இதில் மோட்டார் வாகன விபத்துவழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக் கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு மற்றும் தொழிலாளர் நல வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

முதல் எடுக்கப்பட்ட மூன்று வழக்குகளில் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்களுக்கு 33 லட்சம் ரூபாய் காசோலை தொகையாக வழங்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top