திருவள்ளூர் அருகே தரைப்பாலம் வெள்ள பெருக்கால் மூழ்கியதால்
பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்பு.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட எல்லப்ப நாயுடு பேட்டை ஊராட்சியில் தரைபாலம் மூழ்கியதால் கிராமமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது,
இந்த கிராமத்தில் சுமார் 500 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்நிலையில்தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டன.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில்,
இந்த தரைபாலம் மூலமாக அப்பகுதி கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்கள், மற்றும் மருத்துவமனைக்கு செல்லும் எளிய வழிகள் என எல்லாவற்றுக்கும் இந்த தரை பாலம் உதவியாக இருந்து வந்த நிலையில் தற்போது பெய்து வந்த கனமழையால் தரை பாலும் முழுவதும் அடித்துச் செல்லப்பட்டு மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இது சம்பந்தமான அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும்
இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றசாட்டுகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் எங்களுடைய கோரிக்கைகளை கவனத்தில் ஏற்றுக்கொண்டு விரைவாக எங்கள் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் மேம்பாலம் கட்டி தர வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.