தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூ கிலோ 7500 வரை ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ 7500 வரை ஏலம் போனது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாகவும் , மல்லிகை பூவின் வரத்து குறைந்ததாலும் மல்லிகை பூ கிலோ 7500 வரை ஏலம் போவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் பிச்சிப்பூ கிலோ 500 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 100 ரூபாய், வரையிலும் பன்னீர் ரோஜாப்பூ கிலோ 150 ரூபாய் வரையிலும் இன்று ஏலம் போனது.