காரியாபட்டி :
விருதுநகர், காரியாபட்டி மல்லாங்கிணர் பகுதியில், சென்னம்பட்டி கால்வாய் சீரமைப்பு பணிகளை, அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மல்லாங்கிணர் அருகே, நந்திக்குண்டு கீழத்துலுக்கன் குளம் கிராமம் வழியாக சென்னம்பட்டி கால்வாய், உள்ளது.
கீழ துலுக்கன் குளத்திலிருந்து நந்திகுண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள சென்னம்பட்டி பழைய கால்வாய் கரைப்பகுதி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறிக் . உடைப்புஏற்பட்ட பகுதியில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டார்.
அதன்படி, பொதுப்பணித்துறையினர் சீரமைப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். . சென்னம்பட்டி கால்வாய் சீரமைப்பு பணிகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் வள்ளிக் கண்ணு, தாசில்தார் மாரீஸ் வரன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் நிறைமதி காரியாபட்டி , ஒன்றியச் செயலாளர் கண்ணன் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் ,மாவட்டக் கவுன்சிலர் தங்க தமிழ்வாணன் உட்பட பலர் உடன் சென்றனர்.