மாகரல் கிராமத்தில் குடிசை வீட்டில் வசித்து வந்த மூதாட்டிக்கு ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான வீட்டினை தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கட்டிய நிலையில் அதனை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நன்றி சொன்ன மூதாட்டி குடும்பத்தினர்..
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாகரல் கிராமத்தில் காலம் சென்ற எட்டியப்பன் என்பவரின் மனைவி மல்லிகா வறுமையின் காரணமாக குடிசை வீட்டில் தங்கிக் கொண்டிருந்தார்.
கடும் மழை மற்றும் வெயில் காலங்களிலும் இதே குடிசையில் வாழ்ந்து வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக ஒன்றிய நிர்வாகி வினோத் தனது மாவட்ட நிர்வாகி எஸ்.கே.பி தென்னரசு ஆலோசனை பேரில் நடவடிக்கை மேற்கொண்டு அந்த மூதாட்டிக்கு வெற்றிக் கழக நிர்வாகிகள் உதவியுடன் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான வீடு கட்டி கொடுத்தார்.
அதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று அக்கிராமத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் குத்துவிளக்கேற்றி வீட்டினை திறந்து வைத்தார்.
மேலும் அந்த மூதாட்டியுடன் உரையாடிய போது அந்த மூதாட்டி தனக்கு உதவி செய்த அனைத்து நபர்களுக்கும் நன்றி சொல்வதாகவும் ஏற்கனவே மழைக் காலங்களில் இதுவே தங்க வேண்டிய நிலைமையும் சில காலம் வாடகை வீட்டில் தங்கி இருந்தோம் நிலையில் இந்த உதவி பெரிது உதவுகிறது என தெரிவித்தார்.